என் மலர்
சினிமா செய்திகள்
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. சிம்புவின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
- நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
- சிம்பு நடிக்கும் 49-வது படம் அறிவிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் தான் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், நடிகர் சிம்பு நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இறைவனுக்கு நன்றி. அட்மேன் சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய பயணத்தை தொங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
"இதைவிட சிறப்பாக இதனை துவங்க முடியாது. என் 50-வது படம், எனக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் கனவு படம். இருவரும் முழுமனதுடன் பணியாற்றுகிறோம். புதிய பயணம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் போல் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்க இல்லாம நான் இல்ல," என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவவர் நடிக்கும் 50-வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரவீன் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை மூர்த்தி மேற்கொள்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிம்பு குழந்தை பருவ தோற்றத்தில் கையில் தீப்பந்தம் ஏந்தி சிரித்த முகத்துடன் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.