என் மலர்
சினிமா செய்திகள்
X
சிஎஸ்கே போட்டியை நேரில் கண்டு ரசித்த சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ்
Byமாலை மலர்4 April 2023 12:19 PM IST
- ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.
- டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்த சிவகார்த்திகயனின் வீடியோ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் சிவகா்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X