என் மலர்
சினிமா செய்திகள்
Mura படக்குழுவை வாழ்த்திய எஸ்.ஜே.சூர்யா
- மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு.
- முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த 8 ஆம் தேதி வெளியானது .
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இந்நிலையில் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாள இயக்குனரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் `முரா' மலையாள திரைப்படம் உருவாகி கடந்த 8 ஆம் தேதி வெளியானது .
இப்படம் ஒரு கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபுவின் HR பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படக்குழுவை வாழ்த்தி நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " இது மாதிரியான ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கு மக்கள் எமோஷனலாக ஃபீல் செய்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. படத்தை குறித்து வரும் பல நல்ல விமர்சனங்களை பற்றி கேட்டேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இயக்குனர் முஸ்தஃபா மற்றும் நடித்த இளம் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
இப்படத்தின் இயக்குனரான முஸ்தஃபா இதற்கு முன் அன்னா பென் நடிப்பில் வெளியான தேசிய விருதைப்பெற்ற கப்பேலா திரைப்படத்தை இயக்கியவராவார்.
Happy to see the emotional feel of an audience in an action packed feeling heard great things abt the film Wishing MURA team#Mustafa director @hridhuharoon#SurajVenjaramoodu And New young actors All the very best pic.twitter.com/BspdTcTivq
— S J Suryah (@iam_SJSuryah) November 12, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.