search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: இளையராஜா கோர்ட்டில் ஆஜர்
    X

    பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

    • பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்க கோரி வழக்கு.
    • இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியங்களை சமர்ப்பித்தார்.

    சென்னை:

    மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் தாங்கள் உரிமம் பெற்றுள்ள பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கில், தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களின் உரிமத்தை பெற்றதற்கான ஒப்பந்தம், இசையமைப்பாளர் இளையராஜா மனைவி பெயரிலுள்ள நிறுவனத்துடன் போடப்பட்டதாகவும், அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவி பெயரிலுள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று காலை இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியங்களை சமர்ப்பித்தார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×