என் மலர்
சினிமா செய்திகள்
தென் மாவட்டம்' படம் - யுவன் Vs ஆர்.கே.சுரேஷ்
- ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை
- “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் விநியோகஸ்தராக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களிலும், பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் 'லுக் போஸ்டர்' வெளியாகி உள்ளது. இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 'போஸ்டர்' சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறியதாவது:-
ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில் "யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்"என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதிவை பார்த்து ஆர்.கே.சுரேஷை ரசிகர்கள் விமர்சித்தனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தற்போது விஜயின் 'GOAT' படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.