என் மலர்
சினிமா செய்திகள்

இளம் இசை கலைஞருக்கு ஜாக்பாட்.. டக்குனு மாறிய சூர்யா 45 இசையமைப்பாளர்!
- சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
- சூர்யா 45 படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 45-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அதன்படி சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்துது.
இந்த நிலையில், சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்