என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பிரபு தேவாவின் பஹீரா பட அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரபு தேவாவின் பஹீரா பட அப்டேட் கொடுத்த இயக்குனர்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/23/1840387-1838168-bag2.webp)
பிரபு தேவாவின் பஹீரா பட அப்டேட் கொடுத்த இயக்குனர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
- 'பஹீரா' திரைப்படம் வருகிறது மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.
பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதன்படி பஹீரா படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வருகிற மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.