search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வீடியோ காலில் பேசி விடுகிறேன்.. கவனம் ஈர்க்கும் நடிகர் கார்த்தி பதிவு..
    X

    கார்த்தி

    வீடியோ காலில் பேசி விடுகிறேன்.. கவனம் ஈர்க்கும் நடிகர் கார்த்தி பதிவு..

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    இப்படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் படத்தின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு அவ்வப்போது ஜாலியாக கலாய்த்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகர் விக்ரம், "சரி. தஞ்சைக்கு வருகிறேன்.


    பொன்னியின் செல்வன்

    எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக கார்த்தி, "இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகிறேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்பு சொல்லி விடுகிறேன். தயவு செய்து மன்னிக்கவும்" என்று தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    Next Story
    ×