என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமா தேசத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.. ரஜினி, கமல் பாராட்டு
- சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
- 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.
2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.
தேசிய திரைப்பட விருது வென்ற அனைவருக்கும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் வாழ்த்துக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ரஜினி பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப்போற்று பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்று பதிவிட்டுள்ளார்.
கமல் பதிவில், சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கமல் பதிவிட்டுள்ளார்.
#NationalFilmAwards தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் @Suriya_offl , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்
— Rajinikanth (@rajinikanth) July 23, 2022