என் மலர்
சினிமா செய்திகள்
சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி
- அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா என்ற படத்தில் நானி நடித்து வருகிறார்.
- இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா என்ற புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தசரா படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து அதனுடன் ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகை சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Can't wait to show you all what #Dasara is. This one will be etched in my heart ❤️#EtlaitheGatlaayeSuskundhaam 🤙🏻Coming to you on 30th March 2023@NameisNani @odela_srikanth @Music_Santhosh @sathyaDP @NavinNooli @sudhakarcheruk5 @SLVCinemasOffl pic.twitter.com/k675GpLzDH
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 26, 2022