என் மலர்
சினிமா செய்திகள்
வெளியானது நிவின் பாலி பட டிரைலர்
- மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நிவின் பாலி.
- இவர் தற்போது நடித்துள்ள படம் மஹாவீர்யர்.
மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ் திரையுலகை மலையாள திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தற்போது நிவின் பாலி இயக்குனர் அபரிட் ஷைன் இயக்கத்தில் நடித்துள்ள படம் மஹாவீர்யர். இந்த படத்தில் ஆசிஃப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவட்சா, சித்திக், விஜய் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
மஹாவீர்யர்
பாலி ஜே.ஆர். பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிஷான் சப்ரா இசையமைத்துள்ளார். காமெடி அட்வென்சராக தயாராகியுள்ள இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வைலதளத்தில் வைரலாகி வருகிறது.