search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைக்கு எதிராக கையெழுத்திட்ட ரஜினிகாந்த்
    X

    ரஜினி

    போதைக்கு எதிராக கையெழுத்திட்ட ரஜினிகாந்த்

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போதை பழக்கமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 70 சதவீதம் போதைப் பழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் 10 கோடி பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள். இன்று ரஜினிகாந்த் அந்த கையெழுத்து இயக்கத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.

    Next Story
    ×