search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மறைந்த சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி
    X

    ரஜினியுடன் சுதாகர்

    மறைந்த சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி

    • ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
    • சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

    அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    ரஜினி - சுதாகர்


    தொடர்ந்து சுதாகரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


    சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி

    இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சுதாகர் என்னுடைய நீண்ட கால நண்பர். ரொம்ப முயற்சிப்பண்ணோம் ஆனால் நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. சுதாகருக்கு எப்பவுமே என்னை பற்றியே யோசனை. நான் சந்தோஷமா இருக்கனும், நான் நல்லா இருக்கனும்னு யோசிக்கக்கூடியவர். மிகவும் நல்ல மனிதர். நல்ல நண்பனை நான் இன்றைக்கு இழந்துவிட்டேன் என்றார்.

    Next Story
    ×