என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..](https://media.maalaimalar.com/h-upload/2022/11/23/1796550-1.jpg)
பத்து தல படக்குழு
படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
- சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பத்து தல
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
பத்து தல படக்குழு
இந்நிலையில் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Finally It's a wrap for #PathuThala … Cant wait for you all to witness #AGR … Thanks to my whole team for all the support and love :) @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/mAntbQhuiY
— Silambarasan TR (@SilambarasanTR_) November 23, 2022