என் மலர்
சினிமா செய்திகள்
திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் பிரபல இளம் நடிகர் தற்கொலை
- தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதிர் வர்மா.
- இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கு திரையுலகில் இளம் நடிகரான சுதிர் வர்மா (33) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 2022-ல் குண்டனப்பு பொம்மை (Kundanapu Bomma), செகன்ட் ஹேண்ட் (Second Hand) போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். இவர் விசாகப்பட்டினத்தில் தனது வீட்டில் கடந்த 18-ந்தேதி விஷம் குடித்திருக்கிறார். இது குடும்பத்தாருக்குத் தெரிந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுதிர் வர்மா
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனில்லாமல் அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அவருக்குக் கிடைத்த புதிய பட வாய்ப்புகள் தற்போது வரிசையாகக் கைநழுவிப் போனதுதான் இவரது தற்கொலை முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சுதீர் வர்மாவின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தெலுங்கு திரையுலகினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.