search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் அரசியலுக்கு வந்தால் கட்சி பாதிக்கும் என்பவர்கள் எதிர்க்கலாம்- எஸ்.வி.சேகர்
    X

    விஜய் அரசியலுக்கு வந்தால் கட்சி பாதிக்கும் என்பவர்கள் எதிர்க்கலாம்- எஸ்.வி.சேகர்

    • விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.

    234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது.


    விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பாக இப்படி பல உதவிகளை செய்து வருவது அவர் விரைவில் அரசியலில் கால்பதிக்க செய்யும் முன்னேற்பாடுகள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் அரசியலில் நுழைந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் காமராஜர் வழியை பின்பற்றினாள் அவர்களுக்கு வெற்றி நிச்சயமாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் நம் கட்சி பாதிக்கும், ஓட்டு போய்விடும் என்று நினைப்பவர்கள் எதிர்க்கலாம். இந்திய குடிமகனாக லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்து ஒரு சரியான அமைப்பை நிறுவிக்கொண்டிருக்கும் விஜய் சரியான நேரத்தில் வந்தால் அவருக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

    Next Story
    ×