search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விழா ஏற்பாட்டாளரிடம் கவுரவ டாக்டர் பட்டம் செல்லுமா? என கேள்வி எழுப்பிய வடிவேலு.. வைரலாகும் வீடியோ..
    X

    வடிவேலு

    விழா ஏற்பாட்டாளரிடம் கவுரவ டாக்டர் பட்டம் செல்லுமா? என கேள்வி எழுப்பிய வடிவேலு.. வைரலாகும் வீடியோ..

    • சில தினங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியாக விருது வழங்கப்பட்டுள்ளது.
    • விருது வழங்கும் போது நடிகர் வடிவேலு இந்த விருது செல்லுமா என்று கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    கவுரவ டாக்டர் பட்டத்துக்கான விருதை காமெடி நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் வழங்கி உள்ளனர். அப்போது அவரிடம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

    இதனை மிகுந்த கவனமுடன் கேட்கும் வடிவேலு அவருக்கே உரித்தான உடல் மொழியுடன் இந்த விருது செல்லுமா! என்று கேட்கிறார். இதற்கும் விழா ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்து வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்து வழங்கி உள்ளனர்.


    'என்டர்டெய்ண்ட் மெண்ட்' பிரிவில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக கூறியதும் வடிவேலு அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். பின்னர் 'ரொம்ப சந்தோசம்' என்று கைகூப்பி வணக்குகிறார். இதன்பின்னர் 'என்றும் அன்புடன் வடிவேலு' என டைரி ஒன்றில் கையெழுத்தும் போட்டு கொடுக்கிறார். ஐயா... நீதியரசர் தலைமையில் நடந்த விருதை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். மிகுந்த பெருமையாக உள்ளது.

    சாதாரண டீ கடையில் இருந்து வந்த எனக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளது என்று கூறும் வடிவேலு 'கற்றவர் சபையில் எனக்கு தனி இடம் வேண்டும்... உன் கண்ணில் நீர் வழிந்தால் உலகே அழ வேண்டும் என்கிற பாடலையும் பாடி மகிழ்ச்சியுடன் பட்டத்தை பெற்றுக்கொள்கிறார்.

    சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வடிவேலுவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×