என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி.. ராதிகா -வடிவேலு ஜாலி வீடியோ ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி.. ராதிகா -வடிவேலு ஜாலி வீடியோ](https://media.maalaimalar.com/h-upload/2023/05/27/1888191-18.webp)
வடிவேலு -ராதிகா
ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி.. ராதிகா -வடிவேலு ஜாலி வீடியோ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பி. வாசு இயக்கத்தில் ’சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.
சந்திரமுகி 2
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராதிகா பகிர்ந்த வீடியோ
இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை ராதிகா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Love this cult dialogue of #Vadivelu ,recreating ❤️❤️❤️#comedy #tamilfilm #classic
— Radikaa Sarathkumar (@realradikaa) May 27, 2023
On the sets of #chandramukhi2 @LycaProductions pic.twitter.com/3T60Ad6wzs