என் மலர்
சினிமா செய்திகள்
ரசிகர்கள் அறியாத பக்கம்.. யார் இந்த வசந்த் ரவி..?
- நடிகர் வசந்த் ரவி வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
- இவர் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வசந்த் ரவி. புகழ் பெற்ற நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலின் உரிமையாளார் முத்துகிருஷ்ணனின் மகனான இவர் இங்கிலாந்தில் மருத்துவராக புணிபுரிந்து வந்தார். பின்னர் நடிப்பு மீது கொண்ட காதலால் 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான 'தரமணி' திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். 'தரமணி' படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றார்.
தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 'அஸ்வின்ஸ்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார்.
இவ்வாறு ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வசந்த் ரவி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவருக்கு மிகப்பெரிய மையில்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.