என் மலர்
சினிமா செய்திகள்

இது கனவு இல்லை என்று யாராவது கூறுங்கள்.. நெகிழ்ச்சியில் விக்ரம்..

- பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன் -1
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ௫௦ நாட்களை கடந்துள்ளது.
பொன்னியின் செல்வன் - 1
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம், "இது கனவு இல்லை என்று யாராவது என்னிடம் கூறுங்கள்" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Somebody pls pinch me.. & tell me this is not a dream. #PonniyinSelvan pic.twitter.com/zZ7BhAm1HF
— Vikram (@chiyaan) November 18, 2022