என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![என் பிரச்சினைகளை முருகனிடம் கூறினேன் - நடிகர் யோகிபாபு என் பிரச்சினைகளை முருகனிடம் கூறினேன் - நடிகர் யோகிபாபு](https://media.maalaimalar.com/h-upload/2022/12/07/1802984-1.webp)
X
யோகி பாபு
என் பிரச்சினைகளை முருகனிடம் கூறினேன் - நடிகர் யோகிபாபு
By
மாலை மலர்7 Dec 2022 9:59 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நடிகர் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார்.
- அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்
திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்ட அவர் அதன்பிறகு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார்.
யோகி பாபு
இதையடுத்து, அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது, நடிகர் யோகிபாபு "கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டினேன்" என்று கூறினார்.
கடந்த சில நாட்களாக நடிகர் யோகிபாபு மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அவர் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பழனி முருகன் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.
Next Story
×
X