search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்கள் கொடுத்த தொல்லையால் மதுவுக்கு அடிமையான பிரபல நடிகை
    X

    தேஜஸ்வி மடிவாடா

    ரசிகர்கள் கொடுத்த தொல்லையால் மதுவுக்கு அடிமையான பிரபல நடிகை

    • தமிழில், ‘நட்பதிகாரம் 79’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் தேஜஸ்வி மடிவாடா.
    • இரண்டு வருடங்களாக போதை பழக்கத்தில் அவதிப்பட்டதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வி மடிவாடா. தமிழில், 'நட்பதிகாரம் 79' என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது 'கமிட்மென்ட்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தேஜஸ்வி 'வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் சினிமா மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது என்றும், சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கும் பாலியல் அழைப்புகள் வந்தன' என்றும் தெரிவித்திருந்தார்.

    தேஜஸ்வி மடிவாடா

    இந்நிலையில் தேஜஸ்வி மடிவாடா இரண்டு வருடங்களாக போதை பழக்கத்தில் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேஜஸ்வி அளித்துள்ள பேட்டியில் "தெலுங்கு நடிகர் கவுஷலின் ரசிகர்களின் தொல்லையால் நான் மதுவுக்கு அடிமையானேன். பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நான் பங்கேற்றபோது, கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதிலிருந்து தப்பிக்க, நான் குடிக்க ஆரம்பித்தேன். இதனால் உடல்நலம் குன்றி, பின்னர் அதில் இருந்து மீண்டேன்" என்றார்.

    Next Story
    ×