என் மலர்
சினிமா செய்திகள்
திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் - நடிகை கஸ்தூரி சர்ச்சை பதிவு
- தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
- இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.
அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.
கஸ்தூரி
இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில், "வட நாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2023