என் மலர்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் அலுவலகம் முன் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை!
- தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் பன்னி வாசு.
- தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி துணை நடிகை சுனிதா போயா நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது தயாரிப்பாளர் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா, தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்த பெண் போலீசார், தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதற்குமுன்பு கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் சுனிதா ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது புகார் அளித்திருந்தும் பன்னி வாசு மீது போலீசார் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி மீண்டும் சுனிதா போயா இந்த போராட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.