search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் விருமாண்டி அபிராமி
    X

    விருமாண்டி அபிராமி - பாபா பிளாக்‌ ஷீப்

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் விருமாண்டி அபிராமி

    • அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.
    • இப்படம் பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் "பாபா பிளாக் ஷீப்". நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, "பாபா பிளாக் ஷீப்" உருவாகி வருகிறது.


    விருமாண்டி அபிராமி - ராஜ்மோகன்

    இப்படம் குறித்து இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது, "பாபா பிளாக் ஷீப்" பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.


    பாபா பிளாக் ஷீப் படப்பிடிப்பு

    மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார்.

    Next Story
    ×