என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![தென்காசி சாலையில் உலா வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ.. தென்காசி சாலையில் உலா வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ..](https://media.maalaimalar.com/h-upload/2022/12/27/1813067-2.webp)
அஜித்
தென்காசி சாலையில் உலா வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ..
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- 'துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
துணிவு
இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் 'துணிவு' படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. மேலும், இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தென்காசி சாலையில் அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் தென் தமிழகத்தின், தென்காசி மாவட்டத்திற்கு தனது மோட்டார் பைக்கில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தென்காசி அருகே உள்ள திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அஜித் தனது மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். இதை பார்த்த இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.