search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பைக்கில் சென்ற அஜித்தை காரில் துரத்திய குடும்பம்
    X

    அஜித்

    பைக்கில் சென்ற அஜித்தை காரில் துரத்திய குடும்பம்

    • நடிகர் அஜித் தனது ஓய்வு நேரங்களில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
    • இவர் தற்போது நேபாளத்தையொட்டி இருக்கும் பகுதியில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

    நடிகர் அஜித் பைக் மூலம் இந்தியாவைச் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பனி படர்ந்த பல்வேறு பகுதிகளில் பைக்கில் நண்பர்களுடன் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

    தற்போது அஜித்தின் 62-வது திரைப்படம் தொடக்க வேலையில் இருப்பதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். நேபாளத்தையொட்டி இருக்கும் பகுதியில் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். சாலை மார்க்கமாக அவர் செல்லும்போது அவரை அடையாளம் கண்டுகொண்டு காரில் வந்த சிலர் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

    அப்போது தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்த அஜித்தும் தன் பைக்கை நிறுத்தி விட்டு அவர்களிடம் விசாரித்தார். போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையைத் தெரிவிக்கவே, தயங்காமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

    Next Story
    ×