என் மலர்
சினிமா செய்திகள்
'துணிவு' படத்தில் இணைந்த அனிருத்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
- அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த படம் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
துணிவு படக்குழு
இந்நிலையில், 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் 'சில்லா சில்லா' என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதனை ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அனிருத் பாடிய 'ஆலுமா டோலுமா' பாடல் பெரும் வரவேற்பை பெற்றததையடுத்து இந்த பாடலும் மக்கள் மத்தியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#ChillaChilla recorded our Rockstar @anirudhofficial 🫶🏼 in the lyrics of @VaisaghOfficial
— Ghibran (@GhibranOfficial) November 4, 2022
Hashtag 🙌🏻 👉🏼 #ThunivuUpdate #Ajithkumar #HVinoth #NoGutsNoGlory @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan pic.twitter.com/lgwsZ9rpwp