என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன்-6: களம் இறங்கும் போட்டியாளர்களின் புதிய அப்டேட்
- தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ்.
- இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கப்படுகிறது.