என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி
- பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 29 நாட்களை எட்டியுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசலும் நேற்றைய பிக்பாஸ் சீசனில் ஷெரினாவும் வெளியேற்றப்பட்டனர். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 29-வது நாட்களை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில், ஸ்கராட்ச் கார்டுக்கான நேரம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 1,2,3 என்று 10 இலக்க எண்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. 10 வது எண்ணில் இருந்து பந்தை முதல் எண்ணை நோக்கி மட்டையால் தள்ள வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அந்த பந்தை செலுத்துவதே டாஸ்க். அச்சமயம் தனலட்சுமி அந்த டாஸ்கை சரியாக செய்து முடிக்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க தனலட்சுமிக்கு பிக்பாஸ் உத்தரவிடுகிறார். அதன்படி அவரும் விக்ரமன், ராம், சிவின், அசீம் ஆகியோருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.