search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பில் இல்லை.. போட்டியாளர்களை குறிவைக்கும் கமல்ஹாசன்..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பில் இல்லை.. போட்டியாளர்களை குறிவைக்கும் கமல்ஹாசன்..

    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் உப்பு நாட்டையும் மாத்தியிருக்கு வீட்டையும் மாத்தியிருக்கு. பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நான் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பதை யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களிடம் தான் பேசனும் என்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×