search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ்: நீங்க ரவுடிதனம் பண்றீங்க - கோபத்தில் விக்ரமன்
    X

    பிக்பாஸ்: நீங்க ரவுடிதனம் பண்றீங்க - கோபத்தில் விக்ரமன்

    • பிக்பாஸ் நிகழ்ச்சி 52-வது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான புரோமோவில் அசீம் மற்றும் அமுதவாணன் சண்டையிடுகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 52-வது நாட்களை நெருங்கியுள்ளது.

    இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பழங்குடியினரான அசீம், ஏலியன் அணியில் உள்ள அமுதவாணனிடம் சண்டை போடுகிறார். அதில், ஏன் நீங்க இவ்ளோ அசிங்கமா சீப்பா கேம் விளையாடுறீங்க. அவங்க கேவலமானவங்க நம்ம அப்படி இல்ல என்று அசீம் சொல்ல, நீங்க ரவுடிதனம் பண்றீங்க என்று அமுதவாணனும் விக்ரமனும் கோபமாக வாதிடுகின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.


    Next Story
    ×