என் மலர்
சினிமா செய்திகள்
X
கேப்டன் மில்லர்: ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்த தனுஷ் பதிவு
Byமாலை மலர்25 Jun 2023 11:25 AM IST
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனுஷ் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் என்று தனுஷ் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Captain Miller first look ⏳
— Dhanush (@dhanushkraja) June 25, 2023
Next Story
×
X