என் மலர்
சினிமா செய்திகள்

X
சந்திரமுகி 2 போஸ்டர்
சந்திரமுகி - 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. வைரலாகும் போஸ்டர்
By
மாலை மலர்14 Jun 2022 6:53 PM IST

- பி. வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.
இந்நிலையில், சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பி. வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. தற்போது சந்திரமுகி பாகம் இரண்டின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவாஜி கணேசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X