என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சந்திரமுகி- 2 படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சந்திரமுகி- 2 படக்குழு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/28/1906395-32.webp)
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சந்திரமுகி- 2 படக்குழு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
சந்திரமுகி 2 போஸ்டர்
இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய அப்டேட் நாளை (ஜூன் 29) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
An exciting announcement from the house of Chandramukhi ?️ is coming your way at 5PM tomorrow! ?#Chandramukhi2 ?️ #CM2 ?️
— Lyca Productions (@LycaProductions) June 28, 2023
? #PVasu
? @offl_Lawrence @KanganaTeam
? @mmkeeravaani
? @RDRajasekar
?️ #ThottaTharani
✂️?️ @editoranthony
✨ @realradikaa Vaigaipuyal #Vadivelu… pic.twitter.com/Knk16fGltb