என் மலர்
சினிமா செய்திகள்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு.. நடிகர் சந்தானத்திற்கு பாராட்டு!
- நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்' .
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'டிடி ரிட்டன்ஸ்' படக்குழு நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Team K.Senthil joined Team RK Entertainment to celebrate the blockbuster success of "DD Returns." It was truly an honor to work with both these teams, and we look forward to many more successful collaborations in the future?@RKEntrtainment @five_senthil @kbsriram16 pic.twitter.com/3sDIAy091U
— Santhanam (@iamsanthanam) July 31, 2023