என் மலர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை பாராட்டிய பிரபல பாலிவுட் நடிகை
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'.
- உலகம் முழுவதும் விக்ரம் படம் புதிய வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படம் வெளியாகி 10 நாட்களில் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்கள் திரைபிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி விக்ரம் படக்குழுவை சந்தித்து பாராட்டியிருந்தார். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர் கமல் குறித்து பதிவிட்டிருந்தது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோர், "என்னுடைய படத்தின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விக்ரம் படம் பார்ப்பேன். அவர் என்ன பண்ணாலும் தங்கமாகத் தான் இருக்கும்" எனக் பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கமல் நடிப்பில் வெளியான இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களுக்கு நடிகை மெக்கன்ஸி வெஸ்ட்மோரின் தந்தை மைக்கேல் வெஸ்ட்மோர் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
As I wrap my film I definitely will! I can't wait!!! Anything he does is gold!
— McKenzie Westmore (@mckenziewestmor) June 11, 2022