என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![அனுராக் காஷ்யப் என் மாதவிடாய் தேதிகளை கேட்டறிந்தார்.. பிரபல நடிகை பேட்டி அனுராக் காஷ்யப் என் மாதவிடாய் தேதிகளை கேட்டறிந்தார்.. பிரபல நடிகை பேட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/06/1910813-12.webp)
அம்ருதா சுபாஷ்- அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப் என் மாதவிடாய் தேதிகளை கேட்டறிந்தார்.. பிரபல நடிகை பேட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்.
- இவர் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுராக் காஷ்யப்
இந்நிலையில், அனுராக் காஷ்யப் படத்தில் நடித்தது குறித்து பிரபல நடிகை அம்ருதா சுபாஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அனுராக்குடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளை ஸேக்ரெட் கேம்ஸ் பாகம் இரண்டில் நடித்தேன். ஆண், பெண் பேதங்கள் இல்லை. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அவர் இயக்குனர் குழுவை அழைத்தார். இக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து அவர்தான் என்னிடம் கேட்டறிந்தார். அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார். என்று கூறினார்.
அம்ருதா சுபாஷ்
அம்ருதா சுபாஷ் சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.