என் மலர்
சினிமா செய்திகள்
முதல் பாடல் அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் படக்குழு
- ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் பாடலை நாளை (11.02.2023) வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
One of the most celebrated classic hit song #PaadathaPatellam gets a trendy, foot tapping remix in #Rudhran ?
— Five Star Creations LLP (@5starcreationss) February 9, 2023
First single from February 11th !!@offl_Lawrence @kathiresan_offl @gvprakash pic.twitter.com/BWaDSVIt2V