என் மலர்
சினிமா செய்திகள்
டெல்லி ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு போல் தனது வழக்கு இருந்தது - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
- கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட படங்களில் நடித்தவர் புளோரா சைனி.
- தனது முன்னாள் காதலன் தன்னை எப்படி அடித்து பாலியல் துன்புறுத்தினார் என்பது குறித்து புளோரா சைனி மனம் திறந்து பேசினார்.
பிரபல நடிகை புளோரா சைனி, தமிழில் கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்பட தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். புளோரா சைனி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதலனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து பேசினார். "ஆரம்பத்தில் அவர் மிகவும் இனிமையாக இருந்தார். மிகவும் நல்லவர், அவர் ஒரு நல்ல பையன் என்று என் பெற்றோரும் ஏமாற்றப்பட்டனர்.
ஷ்ரத்தா விஷயத்திலும், அதுதான் நடந்தது. அவர் என்னை முதலில் என் குடும்பத்தில் இருந்து துண்டித்துவிட்டார். நானும் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் அவருடன் சென்ற ஒரு வாரத்தில், நான் அவமானப் படுத்தப்பட்டேன், அவன் ஏன் என்னை திடீரென்று அடிக்கிறான் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் இரவு, அவர் என்னை அடித்து உதைத்தார். எனது தாடை உடைந்தது.
அவர் அன்றிரவு உன்னைக் கொன்றுவிடுவேன் என்று என்னை மிரட்டினார். அந்த நொடியில், எனது அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது, அத்தகைய தருணத்தில் நீங்கள் ஓட வேண்டும் ஆடை இருக்கிறதா இல்லையா என்று கூட நினைக்க வேண்டாம். உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்படித்தான் நான் என் வீட்டிற்கு ஓடினேன், நான் திரும்பப் போவதில்லை என்று முடிவு செய்தேன். பின்னர் ஒருவழியாக எனது காதலனுக்கு எதிராக புகார் அளித்தேன் என கூறினார். டெல்லியில் நடந்த அதிர்ச்சியூட்டும் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை போல் தனது வழக்கு இருந்ததாக கூறினார்.