என் மலர்
சினிமா செய்திகள்
'ஜென்டில்மேன்-2' மேலும் ஒரு பிரபலத்தை இணைத்த படக்குழு
- ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
ஜென்டில்மேன்-2
மேலும், இந்த படத்தில் கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக அண்மையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'ஜென்டில்மேன்-2' படத்தில் நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சேத்தன் சீனு இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.