என் மலர்
சினிமா செய்திகள்
ட்ரெண்டாகும் ஜென்டில்மேன்-2 வீடியோ
- கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் 'ஜென்டில்மேன்-2' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.
ஜென்டில்மேன்-2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.