என் மலர்
சினிமா செய்திகள்
'லியோ' பேனர்கள் வைக்க தடை விதித்த உயர்நீதிமன்றம்
- ’லியோ’ திரைப்படம் பல மொழிகளில் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் ரிலீஸுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உரிய அனுமதியின்றி 'லியோ' படத்தின் பேனர்கள் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றவும் அரசுக்கு தரப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.