என் மலர்
சினிமா செய்திகள்
X
மீரா மிதுனுக்கு எதிரான பணமோசடி வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
Byமாலை மலர்24 Dec 2022 12:57 PM IST
- பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
- இவர் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டது.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ரூபாய் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மீரா மிதுன் மீது குற்றச்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X