என் மலர்
சினிமா செய்திகள்
வாழ்த்து தெரிவித்த இளையராஜா.. நன்றி கூறிய கமல்
- கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இசையமைப்பாளர் இளையராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள கமல்ஹாசன், "நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும்
— Kamal Haasan (@ikamalhaasan) June 21, 2022
உங்கள் நான். https://t.co/54VwAY3Iul