என் மலர்
சினிமா செய்திகள்
X
என்னுடைய அருமை நண்பர் நம்மை விட்டுப் பிரிந்தது வருத்தமளிக்கிறது.. ரஜினி இரங்கல்
Byமாலை மலர்6 Jan 2023 12:45 PM IST
- ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
- சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பது, "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
X