என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு.. ஊழியர் படுகாயம்
- நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாலா(26) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கியதில் 15அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.