என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்.. வைரலாகும் ஜெயிலர் போஸ்டர் முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்.. வைரலாகும் ஜெயிலர் போஸ்டர்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/14/1915028-15.webp)
முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்.. வைரலாகும் ஜெயிலர் போஸ்டர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயிலர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Muthuvel Pandian's countdown starts? #Jailer releasing Worldwide on Aug 10th ?@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts… pic.twitter.com/hqsDv7D95I
— Sun Pictures (@sunpictures) July 14, 2023