என் மலர்
சினிமா செய்திகள்
X
பாலிவுட்டை மிரள வைத்த அட்லீ.. வசூலை வாரிகுவிக்கும் ஜவான்
Byமாலை மலர்7 Oct 2023 10:51 AM IST (Updated: 7 Oct 2023 11:22 AM IST)
- அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
- இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
ஜவான் போஸ்டர்
இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜவான்' திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட்டின் ஒட்டு மொத்த படங்களின் வசூலை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X