என் மலர்
சினிமா செய்திகள்
அவதூறு பதிவுகளால் விரக்தி.. அதிரடி முடிவெடுத்த பிரபல நடிகர்..
- மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ்.
- இவர் தமிழில் ஜெகமே தந்திரம், பபூன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் நடித்துள்ள 'இரட்டா' திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜோஜு ஜார்ஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக வீடியோ ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஜோஜு ஜார்ஜ்
அதில் ஜோஜு ஜார்ஜ் கூறியதாவது, "இரட்டா படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்க முயன்றேன். ஆனால், எனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்களிடம் உதவி கேட்கவில்லை. என்னை தேவையில்லாமல் துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" இவ்வாறு கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.